ஊரடங்கில் கிடைத்த நேரத்தை சாதனை ஆக்கிய நெல்லை மாணவி...சர்வதேச யோகா தினம்....


நெல்லையைச் சேர்ந்த 10 வயது மாணவி பிரிஷா. பாளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் பிரிஷா 41 உலக சாதனைகளை படைத்துள்ளார். வீட்டில் உலக சாதனை விருதுகள் பதக்கங்கள் கோப்பைகள் என குவித்து வைத்திருக்கும் மாணவி பிரிஷா ஊரடங்கு காலத்தில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி ஏதாவது புதிய சாதனையை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். அதன்படி தனது ஓய்வு நேரத்தில் யோகாவை பயன்படுத்தி கண்களை கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், சைக்கிள் ஓட்டுதல், சீட்டுக்கட்டில் இருந்து எடுத்துக் கொடுக்கும் சீட்டில் உள்ள எண்களை சரியாக கூறுவது, முன்னால் இருக்கும் நபர் காண்பிக்கும் சைகைகளை தெளிவாக காண்பிப்பது என பல்வேறு சாதனைகளை செய்து காண்பிக்கிறார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த சாதனை மாணவி பிரிஷா யோகாவினால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் மாணவர்களின் ஞாபக சக்தியும் அதிகரிப்பதாகவும் அதனால் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகத்தின் முதன்முதலில் அதிக சாதனைகள்( 41உலக சாதனைகள் ) படைத்த முதல் சிறுமி.உலகிலேயே முதன்முதலில் யோகாவில் நீருக்கடியில் செய்யும் யோகாவிலும்,நீச்சலிலும் இளம் வயதில் அதிக உலக சாதனைகள் படைத்துள்ள்ளார்.
பிரிஷா உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர். இதற்கான சான்றிதழ் central govermental commission (NCPCR) வழங்கியுள்ளது.
பிரிஷா இரண்டு வருடங்களாக முதியவர்கள், பார்வையற்றவர்கள் ,போலீஸ் அதிகாரிகள், என்சிசி மாணவர்கள், பள்ளிகள், கல்லூரிகளில் யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இரண்டு வருடங்களாக தினமும் திருநெல்வேலியிலுள்ள பார்வையற்றோர் பள்ளியில் யோகா வகுப்பு எடுக்கிறார். இதில் யோகா கற்கும் மாணவர்களுக்கு ஞாபகசக்தியும், பார்வையும் அதிகரித்துள்ளது. பிரிஷாவின் பார்வையற்ற மாணவர் கணேஷ்குமார் யோகாவில் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.
பிரிஷாவை பற்றி போட்டித் தேர்வில் மாணவர்கள் படிப்பது நம் இந்திய நாட்டிற்கே பெருமை.
பிரிஷா பாளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். இவர் இதுவரை மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச யோகா போட்டிகளில் 100க்கும் மேல் தங்க பதக்கம் பெற்றுள்ளார். பிரிஷா மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடந்த சர்வதேச யோகா போட்டிகளில் தங்கம் வென்று சாம்பியன் ஆனார். யோகா ராணி, யோகா கலா,யோகா ரத்னா, யோகா ஸ்ரீ,ஆசனா ஸ்ரீ, யோகா சாதனா, இளம் சாதனையாளர் விருது, 2017, 2018, 2019, அமைதிக்கான விருது, அப்துல் கலாம் விருது ,2020 அன்னை தெரசா விருது ,உலகின் முதல் இளம் வயது அதிக உலக சாதனையாளர் விருது, பாரதி கண்ட புதுமைப்பெண் விருது, கலைஞர் விருது, சாதனை செல்வி போன்ற விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார்.
மாணவியின் தந்தை கார்த்திகேயன்-தொழிலதிபர், தாயார் தேவி பிரியா - வழக்கறிஞர், இவர்தான் பிரிஷாவுக்கு யோகா மற்றும் நீச்சல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். அவரது தாயார் தேவிபிரியா மற்றும் பாட்டி ரவிச்சந்திரிகா ஆகிய மூவரும் சேர்ந்து விரைவில் உலக சாதனை செய்ய இருக்கிறார்கள்...
News sponser : https://lapureherbals.in/
