கோவிட் 19 காரணமாக நெல்லையில் வீடியோ கன்பிரன்ஸ் மூலம் நடந்த உலக யோகா தின நிகழ்வுகள்.


சர்வதேச யோகா தினம் ஜூன் மாதம் 21 ம் தேதி உலகம் முழுவது கடைபிடிக்கப்பட்டுவருகிறது.கடந்த சில ஆண்டுகளாக இந்த விழா வெகுவிமர்சையாக நடைபெற்று ஆயிரகணக்கானோர் ஒரே இடத்தில் கூடி யோக நிகழ்வை செய்துவந்தனர்.இந்த ஆண்டு கோவிட் 19 எனும் கொரனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக அதிகளவில் பொதுமக்கள் கூட கூடாது என மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச யோகா நிகழ்வுகள் 5 அல்லது 6 பேருடன் சமூக இடைவெளி கடைபிடித்து காணொளி காட்சிகள் வாயிலாக நடத்தப்பட்டது.அதன்படி நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் மனவளகலை மையம் இணைந்து சர்வதேச யோகா நிகழ்வுக்கு காணொளி காட்சிகள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி நெல்லை அறிவியல் மையத்தில் உள்ள அரங்கில் 6 பேர் இணைந்து யோக ஆசனங்களை செய்தனர் அதனை வீடியோ கேமராக்கள்கொண்டு பதிவு செய்து பேஸ்புக்,டிவிட்டர்,யூ டியூப் மூலம் ஒளிபரப்பி தாங்கள் தங்கள் வீடுகளில் வைத்து ஆசனங்களை செய்ய வழி வகை செய்தனர்.ஆண்டுதோறும் விமர்சையாக நடக்கும் இந்த விழா இந்தாண்டு பிரமாண்டமின்றி காணொளி காட்சி மூலம் செய்து முடிக்கப்பட்டது.
News sponser : https://lapureherbals.in/
