top of page

www.nellaijustnow.com இன் கொலு கொண்டாட்டம்...

நெல்லை டவுண், சமாந்தூர் தெரு, R.வசந்தா அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலு...


✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, வீரவநல்லூர் பழைய அக்கிரஹார தெருவில்

Dr. N. Parvatharani MD

அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலுவின் அழகிய தோற்றம்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, வீரவநல்லூர் பழைய அக்கிரஹார தெருவில்

Dr. N. Parvatharani MD

அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலுவின் அழகிய தோற்றம்.


✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.நவராத்திரியின்போது கொலு வைப்பது எதற்காக?

பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழாவே நவராத்திரி. இந்த பண்டிகையின்போது வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை அன்புடன் உபசரிப்பது வழக்கம். இப்படி செய்வது மூலம் முப்பெரும் தேவிகளும் அருளை வாரிவழங்கும் என பெரியவர்கள் கூறுகின்றனர்.


ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பொம்மைய்யால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன் என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளளார். இதன்படி எதிரிகளை அழிப்பதற்காகவும், தனக்கு ஏற்பட்ட இன்னல்களிலிருந்து விடுபடவும் மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு தேவி புராணத்தின் கதையை கூறினார். அதாவது தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். தேவி புராணத்தில் சொல்லப்பட்டது போன்று செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான். எனவே பொம்மையை பொம்மையாக பார்க்காமல் அம்பிகையே நம் வீட்டில் வந்து அமர்ந்து அருள் பாவிப்பதற்கான வழியாகவே கொலு பொம்மைகள் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக சரஸ்வதி பூஜை சிலை வழிபாடு கொலுவில் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.


நவராத்திரி என்பதை குறிக்கும் விதமாக கொலுவில் ஒன்பது படிகள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். அதாவது ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்) போன்றவற்றை முதற்படியிலும், இரண்டறிவு உயிரினமான (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்) ஆகியவற்றை 2வது படியிலும், மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)3 ஆவது படியிலும், 4வது படியில் நான்கறிவு உயிரினமான (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்) போன்றவற்றையும் வைக்க வேண்டும். மேலும் 5வது படியில் ஐந்தறிவு உயிரினங்களும் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்), 6வது படியில் ஆறறிவு உயிரினங்களையும் (மனித பொம்மைகள்), 7வது படியில் மனிதனுக்கு அப்பாற்பட்ட உயிர்களான மகரிஷிகள், முனிவர்களை வைக்க வேண்டும். அதேபோன்று 8வது படியில் தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்களையும், 9வது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுள் போன்ற முழு முதல் கடவுள்களையும் வைக்க வேண்டும். இதுபோன்று கொலு வைப்பதன் மூலம் மங்களம் பெருகி, முப்பெரும் தேவிகளும் வீட்டில் வாசம் செய்வர்.


கொலுவின்போது துர்க்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும் சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதிதேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற பாடல்கள் தெரிந்தால் பாடலாம் அல்லது ஒலிப்பெருக்கியில் ஒளிக்க செய்யலாம். வீட்டிற்கு வரும் சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்களுக்கு நவதானிய சுண்டல், உணவு அல்லது இனிப்பு பண்டங்கள் கொடுத்து, மஞ்சல் குங்குமச்சிமிழ், பூ, ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு போன்றவை தர வேண்டும்.108 views0 comments
bottom of page