top of page

உலக காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி.




காச நோயாளிகளின் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது அவசியம் துணை இயக்குனர் வலியுறுத்தல்


உலக காசநோய் எதிர்ப்பு வாரம்‌ பிப்ரவரி 17 முதல் 23 தேதி வரை கடைபிடிக்கபடுகின்றது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ஆசிரியை உலகம்மாள் வரவேற்றுப் பேசினார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசளித்து பேருரை ஆற்றிய மருத்துவர். சுந்தரலிங்கம் (காசம்), துணை இயக்குநர் மருத்துவபணிகள் கூறியதாவது, காசநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோய் என்றும் காசநோய் பரம்பரை நோயல்ல என்று கூறினார் .காசநோய் என்பது இனண நோய் பாதித்தவர்களை அதாவது சர்க்கரை நோய், எய்ட்ஸ் நோய், புற்றுநோயாளிகள் போன்றவர்களுக்கு எளிதில் பரவும் என்று தெளிவு படுத்தினார். மேலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் ,போதைபழக்கத்திற்கு அடிமையானவர்களும் காசநோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறினார்.காசநோயின் அறிகுறிகளான இரண்டு வார இருமல், காய்ச்சல், உடல் எடை குறைதல், உடல் சோர்வு ஆகியன பற்றி தெளிவாக எடுத்துரைத்து

காசநோயாளிகளின் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாது காசநோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் 2025க்குள் காசநோயில்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடவேண்டும் என்று கூறினார்.


முன்னிலை வகித்து பேசிய கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் சீனிவாசன் பேசுகையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் காசநோய் பரிசோதனை முறைகள் பற்றியும் சிகிச்சை முறைகள் பற்றி கூறினார் .ஆசிரியை இந்திரா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் மைய அலுவலகர்கள் மற்றும் கடம்பூர் வட்டார முதுநிலை காசநோய் ஆய்வுகூட மேற்பார்வையாளர் தன செல்வி சோபியா மற்றும் சுகாதார பார்வையாளர்கள் மகேஷ்,சகாயராணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடம்பூர் வட்டார முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கு.காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

8 views0 comments
bottom of page