நெல்லை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் உலகப் புகைப்பட தினம்

நெல்லை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இன்று 183 வது உலகப் புகைப்பட தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள வெற்றி மகாலில் வைத்து புகைப் புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ரத்ததான முகாம் மற்றும் தபால் துறையின் இன்சூரன்ஸ் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது .அதேபோல நமது போட்டோ வீடியோ கலைஞர்களின் நலன் கருதி சக்தி மருத்துவமனையின் சார்பாக பயிற்சி வகுப்புக்கு வந்த அனைவருக்கும் முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது.
புகைப்பட கலைஞர்களுக்கு திரு ஹக்கீம் அவர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதில் திரளான போட்டோ வீடியோ கலைஞர்கள் கலந்து கொண்டு உலகப் புகைப்பட தினத்தை கொண்டாடினார்கள் .
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக Rtn.மயில்.T.பாலசுப்பிரமணியன், TVPA மாநில துணைத்தலைவர் B.ஹக்கீம் அவர்கள் ,TVPA மாநில இணை செயலாளர் S.N.பொன்னுசுவாமி அவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் G.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் ஏற்றார்.செயளாளர் U.சரவணன், பொருளாளர் S.செல்வகணேஷ், அமைப்பாளர் G.P.J.விணோத் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.