top of page

பணி செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு...

பணி செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.






பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்டம் இயற்றப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாகவும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி புரியும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,அவர்கள்* இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் பணி நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், மற்றும் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.


*இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன், அவர்கள், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு, அவர்கள், காவல் ஆய்வாளர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.*

59 views0 comments
bottom of page