பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காப்பகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி...
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காப்பகம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.


பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், குழந்தை திருமணம் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்
இன்று *பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. சாந்தி* அவர்கள், பர்கிட் மாநகரம் பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று காப்பகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் *181* குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க *1098* என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், செல்போனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும், செல்போனின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.