வழக்கு சம்பந்தமாக கைப்பற்றப்பட்ட இருசக்கரவாகனத்தை தனது கணவர் உதவியுடன் திருடிய பெண் காவலர் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் காணாமல் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப...,அவர்களின் கவனத்திற்கு வந்தது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்படை அமைத்து வாகன திருட்டில் ஈடுபடுவர்களை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணிபுரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசியா (29),க.பெ. அன்புமணி என்பவர் தான் பாரா அலுவலில் இருக்கும்போது இரவு நேரங்களில் தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து பல்வேறு வழக்கில் சம்பந்தமாக கைப்பற்றப்பட்ட நிலையத்தில் இருக்கும் இருசக்கர வாகனத்தை தான் நிலைய பொறுப்பு அலுவலில் இருக்கும்போதெல்லாம் கணவர் உதவியோடு மூன்று இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். மேலும் நிலையத்தில் இருக்கும் ஒரு மொபைல் போனையும் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஒன்றையும் திருடியுள்ளார். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
*மூன்று இரு சக்கர வாகனங்களும் ஒரு மொபைல் போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*