top of page

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் என்று வழங்கப்படும் சான்றிதழை தொடர்ந்து வழங்க கோரிக்கை..

இந்தியாவில் முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. இந்தியாவில் ஒருசில மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் அந்த உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இருந்தபோதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்று வழங்கப்படும் சான்றிதழ் மத்திய அரசு பணியில் சேர்வதற்கு உறுதுணையாக இருந்தது. மேலும் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி பலமுறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்று வழங்கப்படும் சான்றிதழ் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் தமிழக தமிழகத்தைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் என்று வழங்கப்படும் சான்றிதழை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று அந்தனர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
















News sponser : https://lapureherbals.in/




32 views0 comments
bottom of page