பசுமை தமிழ் தலைமுறைல அமைப்பு நிர்வாகிகள் தன்னார்வலர்களாக 4 நாட்கள் பணியாற்றி வருகிறார்கள்.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு மத்திய அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதி வசவப்பபுரம் சோதனைச்சாவடியில் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தேசிய ஊரடங்கு காலத்தில் கடமையாற்றும் முறப்பநாடு காவல்துறைக்கு உதவியாக காவல் ஆய்வாளர், திரு பார்த்திபன் அவர்களுடன் இணைந்து, பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனத் தலைவர், திரு மு_சுகன்_கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் அமைப்பு நிர்வாகிகள் தன்னார்வலர்களாக தொடர்ந்து 4-வது நாளாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த_நிகழ்வில் பூல்பாண்டி, அரியமுத்து,பரமசிவன்,மூர்த்தி,வேல்முருகன்,மகேஷ்குமார்.