வ.உ.சி.நினைவுநாளை முன்னிட்டு செக்கு எண்ணெய்யில் 100சதுரஅடி ஒவியச்சாதனை..
செக்கிழுத்தசெம்மல்,வ.உ.சி.நினைவநாளை முன்னிட்டு செக்குஎண்ணெய்யில் 100 சதுரஅடி ஒவியச்சாதனை - சிறுமி இரா. தீக்ஷனாவுக்கு பாராட்டு...





சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்தச் செம்மல்,வ.உ.சிதம்பரனாரின் 85 ஆவது நினைவுநாளை,முன்னிட்டு திருநெல்வேலி,சிவராம்,கலைக்கூட மாணவியும் புனிதஇக்னேஷியஸ் கான்வென்ட் 6ஆம் வகுப்பு மாணவியுமான இரா. தீக்ஷனா வ .உ. சி திரு உருவ படத்தை 100 சதுர அடியில் அவர் செக்கிழுத்ததால் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்யில் கருப்பு வெள்ளை ஓவியம் வரைந்து சாதனைபடைத்துள்ளார். இந்தஓவியத்தை ஒருமணிநேரத்தில் மாணவி வரைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவரை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி மாநகர காவல் உதவி ஆணையர்.எஸ்.சேகர் ,ம.தி.தா பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன், கல்வி சங்கமேலாளர் சட்டநாதன், வ.உ.சி இலக்கிய மாமன்றச் செயலாளர் முனைவர்.கோ.கணபதி சுப்பிரமணியன் சிவராம் கலைக்கூட தலைமை பயிற்சியாளர் சிவராமகிருஷ்ணன், கலைக்கூடநிறுவனர் ஓவியஆசிரியர்,கணேசன், மற்றும் ஒவிய ஆசிரியர்கள் சொக்கலிங்கம், திருவானனந்தம், ஆசிரியை கிருபா மற்றும் பலர் பாராட்டினர்...