top of page

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்.ஜி. பாலிமர் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு...






ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்.ஜி. பாலிமர் தொழிற்சாலையில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஐந்து பேர் மரணம்.சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டிணத்தில் உள்ள நிறுவனமான எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சு வாயுவுக்கு ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள், போலீஸார் இந்த ரசாயனத் தொழிற்சாலைக்கு விரைந்ததாக மாவட்ட சுகாதர அதிகாரி திருப்பதி ராவ் தெரிவித்தார்..


கோபால்பட்டிணத்தில் உள்ள ஆர். ஆர். வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ரசாயன வாயு நிறுவனமான எல்.ஜி.பாலிமர்ஸ் இந்தியா தனியார் நிறுவனத்திற்கு அருகில் வாழும் மக்கள் தங்கள் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். மூச்சு விடுதலிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது, இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


கிரேட்டர் விசாகப்பட்டிண முனிசிபல் கார்ப்பரேஷன் தன் ட்வீட்டில், “கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் வசிப்போர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


இது தொடர்பாக வெளியான காட்சிகளில் தொழிற்சாலை சைரன் ஒலி கேட்டது. காத்திருக்கும் ஆம்புலன்ஸ்களில் மக்கள் ஏற்றப்படுவதையும் பார்க்க முடிந்தது . மூச்சு விடச் சிரமப்பட்டவர்களை முகக் கவசமணிந்த சிலர் தூக்கிச் சென்றனர்.


ரசாயன வாயுக்கசிவு அப்பகுதியில் சுமார் 3 கிமீ தொலைவுக்கு பரவியதாக மேற்கு மண்டல ஏ.சி.பி. ஸ்வரூபா ராணி தெரிவித்துள்ளார்.

6 views0 comments
bottom of page