அரசு கால்நடை மருத்துவ கல்லூரி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கால்நடைதுறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்...

அரசு கால்நடை மருத்துவ கல்லூரி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கால்நடைதுறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியில் அமைந்துள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம், மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கூடுதல் விடுதி கட்டடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்