*தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்*




தற்போதைய கொரானோ ஊரடங்கு உத்தரவு காலங்களில் மக்களால் கால்நடை மருத்துவமனைகளுக்கு தங்களது கால்நடைகளை அழைத்து செல்ல முடியாமல் தவிக்கும் தொலைவான கிராமங்களிலுள்ள கால்நடைகளுக்கு தற்பொழுது உள்ள காலநிலையில் ஆடுக்களுக்கு குடற்புழு, ஈரல் புழு தாக்கம் மற்றும் ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் முகம்மது காலித் அவர்களின் உத்தரவுப்படி தென்காசி கோட்ட உதவி இயக்குநர் வெங்கட்டராமன் அவர்களின் அறிவுரைப்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி கிராமத்தில் சிறப்பு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் இன்று திருநெல்வேலி நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஜான் சுபாஷ் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் ஆலங்குளம் வீரபாண்டியன், நெட்டூர் ராமசெல்வம் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஷேக் சுலைமான் ஆகியோர் அக்கிராமத்தில் உள்ள ஆடுகளுக்கு நேரடியாக சென்று குடற்புழு நீக்க சிகிச்சை அளித்தனர்.