“கொரோனா வைரஸ் தொற்று “ தொடர்பாக காவல்துறையினர் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு பேரணி...

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் “கொரோனா வைரஸ் தொற்று “ தொடர்பாக காவல்துறையினர் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு பேரணி துவக்கி வைத்தேன்.
🎯நெல்லை மாநகரில் 583 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .360 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன தற்போது நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
🎯பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் அப்படி மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
🎯பொதுமக்கள் தங்களுக்குரிய வாகனங்களை தேவையில்லாமல் காவல்துறைக்கு தானம் வழங்க வேண்டாம் .
🎯காவல் துறைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பை உபகரணங்களும் உள்ளன
🎯பணியில் இருக்கும் காவலர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது
🎯 தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் மூன்று வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன இவை நாளை முதல் அமலுக்கு வரும் அவர்களுக்கு வாகன ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது
“உங்களுக்காக நாங்கள் வெளியே
நாட்டுக்காக நீங்கள் உள்ளே”
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்