top of page

NGO 'A' காலனியில் 26ம் தேதி, சனிக்கிழமை டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்...

டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

சிறப்பு முகாம்.

நாள் : 26.11.2022, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல்

இடம் : செயிண்ட் ஜோசப் பள்ளி, NGO 'A' காலனி, பெருமாள்புரம்.


திருநெல்வேலி மாநகராட்சி, சுகாதாரப்பிரிவு சார்பில் நடைபெறும்

சிறப்பு மருத்துவ முகாம் 26.11.2022. சனிக்கிழமை அன்று காலை

9.30 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இரத்த சோகை,

வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இரைப்பை மற்றும் குடல் நோய்,

மனநோய், பால்வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண் நோய்,

ஈரல் சம்பந்தமான நோய்கள், அவை சிகிச்சை, மகளிர் நலம், மகப்பேறு,

குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவ சிகிச்சை மற்றும்

அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்படும்.


தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகளும் வழங்கப்படும்.


மேலும் இச்சிறப்பு மருத்துவ முகாமில் நோயாளிகளுக்கு கீழ்க்கண்ட

சிறப்பு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்


இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, கொழுப்பின் அளவு, சர்க்கரை அளவு

இரத்த அழுத்த பரிசோதனை

சிறுநீரில் உப்பு, சர்க்கரை அளவு

கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் சோதனை

இரத்த வகைகள் (Group)

ஈ.சி.ஜி. பரிசோதனை

ஸ்கேன் பரிசோதனை

சித்த மருத்துவ சிகிச்சை

கண் பரிசோதனை செய்து இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை

செய்து (IOL)லென்ஸ் பொருத்தப்படும்


கொரோனா தடுப்பூசி போடப்படும்.


எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் தவறாமல்

கலந்து கொண்டு சிறப்பு பரிசோதனைகளையும், சிறப்பு மருத்துவர்களிடம்

சிகிச்சையும் பெற்றுக்கொள்ளலாம்...

27 views0 comments
bottom of page