top of page

கழுகுமலை அருகே வானரமுட்டி கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம்...








கழுகுமலை அருகே காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

தேசிய காசநோயகற்றும் திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கழுகுமலை அருகே வானரமுட்டி கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது

வீடு வீடாக சென்று காசநோய் அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு சளி மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது பின்னர் வானரமுட்டி சமுதாய நலக்கூட்த்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் மாரியப்பன் தலைமை தாங்கினார்

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் காசநோய் அறிகுறிகள் பற்றி விளக்கமாக பேசினார் , மேலும் காசநோய் ஒழிக்க அரசு எடுத்துவரும் முயற்சிகள் பற்றி கூறினார்

சமூக ஆர்வலர் மாரியப்பன் பேசுகையில் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துக் கூறினார்

இடைநிலை சுகாதார பணியாளர் தனலெட்சுமி சர்க்கரை நோயின் அறிகுறிகள் பற்றி விளக்கமாக பேசினார்

இந் நிகழ்ச்சியில் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா இடைநிலை சுகாதார பணியாளர்கள் பரணி, தனலெட்சுமி,சத்தயகலா,உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

52 views0 comments
bottom of page