நெல்லை மாநகராட்சி பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் சுகாதார பணிகள் ஆய்வு ....




திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி மாநகர நல அலுவலர் டாக்டர் சதிஷ் குமார் ஆலோசனை படி பாளை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த்
பாளையங்கோட்டை மாநகர பகுதியில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் சுகாதார பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் நடராஜன், மேற்பார்வையாளர் முருகன் உடன் இருந்தனர்.
பாளையங்கோட்டை பகுதியில் விடைத்தாள் திருத்தும் மையமான
தூய யோவான் மேல்நிலை பள்ளியில்
சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வருகை தரும் ஆசிரியர்களுக்கு வெப்ப சோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கைகளில் தெளித்தல், சமூக இடைவெளி பின்பற்ற அறிவுறுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தினசரி வகுப்பு அறைகளை கிருமி நாசினி தெளித்து கொசு ஒழிப்பு புகை மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது. நவீன இயந்திரம் மூலமாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க பட்டு வருகிறது. இத்தனை உதவி ஆணையர் நேரில் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்.
News sponser : https://lapureherbals.in/
