வள்ளியூர் பகுதி தொடர் பைக் திருட்டு - 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது...
வள்ளியூர் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் இன்று கைது...

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்ட சரகத்திற்கு உட்பட்ட வள்ளியூர்,பணகுடி, பழவூர், இராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக புகார் காவல் நிலையங்களுக்கு வந்ததன் பேரில் மேற்படி திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள்* வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. யோகேஷ்குமார், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் *வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சாகுல்ஹமீது அவர்கள் மற்றும் வள்ளியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ஸ்டிபன் ஜோஸ், அவர்கள் காவலர்கள் சுரேஷ் மற்றும் லுர்து டேனியல்* ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வள்ளியூர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட *கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி புதூரைச் சேர்ந்த சுனில்(18), செல்வன்(32) மற்றும் கூத்தங்குழி மேலத்தெருவை சேர்ந்த ஜெபாஸ்டின்(23)* ஆகியோரை 05.11.2022-ம் தேதி கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கில் திருடப்பட்ட வாகனங்களுக்கு போலியாக Rc book தயாரித்து கொடுத்த தூத்துக்குடி மாவட்டம், தொட்டியகாரன் விளையை சேர்ந்த *வேலையா(26)* என்பவரை 8.11.2022-ம் தேதி கைது செய்த நிலையில் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய களக்காடு, கோவிலம்மாள் புரத்தை சேர்ந்த திருமலை நம்பி (50) என்பவரை வள்ளியூர் போலீசார் இன்று கைது செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்..