ஆபத்தான வல்லநாடு தாமிரபரணி புதிய பாலத்தை உடனடியாக சரி செய்ய பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு கோரிக்கை.

திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு தாமிரபரணி பாலம் 2012 ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியது.
2017 ஆம் ஆண்டு வல்லநாடு புதிய பாலத்தில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாலத்தின் மேலே ஃபைபர் சீட் விரிக்காத காரணத்தாலே இந்த ஓட்டை விழுந்துள்ளது என தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் பாலத்தின் இரு பகுதியிலும் ஃபைபர் சீட் விரித்து அதன் மீது தார் சுண்ணாம்பு கலந்த கலவையை மேலே அமைத்தனர்.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாலத்தில் ஓட்டை விழுந்தது.
இதனையடுத்து இருவழியில் ஒரு வழி பாதை அடைக்கப்பட்டு ஒரு வழி பாதையில் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் 2021 மார்ச் மாதம் மற்றொரு பகுதியிலும் ஓட்டை விழுந்தது.
பாலத்தின் உட்புறப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் உட்புறத்தில் மேல் கட்டமைப்பு முழுமையாக அனைத்து பகுதியிலும் விரிசல் ஏற்ப்பட்டு சில இடங்களில் கான்ங்கிரிட் நொறுங்கி விழுந்து உள்ளது.
இப்படிப்பட்ட மோசமான பாலத்திற்கு பொறியியல் தோல்வியே காரணம். அதிகாரிகளின் அடுத்தடுத்த திட்டங்கள் தொடர் தோல்வியில் முடிந்து அரசுக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
தற்போது ஓராண்டுக்கும் மேலாக பாலத்தில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் கிடப்பில் உள்ளதால் ஒருவழி போக்குவரத்தில் அதிக அளவில் விபத்து நடைபெறுகிறது.
உடனடியாக மேல் கட்டமைப்பு முழுவதையும் அகற்றி புதிதாக கான்ங்கிரிட் போட வேண்டும் என பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவன தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.