top of page

வல்லநாட்டில் புதிய சித்தமருத்துவ கட்டிட திறப்பு விழா.,.







வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்தமருத்துவ கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி,மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய ஆய்வு குழுமத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் ரூ.15 திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதிராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜசெல்வி வரவேற்றார்.

விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர்ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உள்ளிட்டவர்களுக்கு சித்த மருத்துவர்கள் செல்வக்குமார், ரதிசெல்வம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கபசுரக்குடிநீர் வழங்கினர்.

இதில், திட்ட இயக்குநர் தனபதி, ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் சங்கரநாராயணன், டாக்டர்.சுப்பையாபாண்டியன், கருங்குளம் யூனியன் துணைச்சேர்மன் லெட்சுமணப்பெருமாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் காசிராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயம்பெருமாள், அதிமுக நிர்வாகிகள் பிரபாகர், வெயிலுமுத்து, லெட்சுமணப்பெருமாள், ஒன்றிய பிரதிநிதி ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம், கிளை செயலாளர் கணபதி, பஞ்சாயத்து தலைவர் வல்லநாடு கஸ்பா சந்திராமுருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, ஆய்வாளர் ஷாகீர், மருந்தாளுனர் வெங்கடேசன் மற்றும் மருத்துவத்துறையினர், நோயாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுந்தரி நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார் தலைமையில் மருந்தாளுனர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்..

35 views0 comments
bottom of page