வல்லநாட்டில் ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது...
*வல்லநாட்டில் ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.





தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் *சென்னை AAA இஞ்சினியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்* சார்பாக *புனித ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி *20.04.2022* (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மாவட்ட காசநோய் மையத்தின் நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் *டாக்டர்.அ.ஆல்பர் சேக்ரட் செல்வின்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் *டாக்டர்.ஆ.முருகேஸ்வரி,* சித்த மருத்துவ அலுவலர் *டாக்டர்.ச.செல்வகுமார்* அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
புனித ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு ஒரு மாத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், பலசரக்கு சாமான்கள்
உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை *AAA* இஞ்சினியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளர் *திரு.அ.அப்துல் அஜீம்* அவர்கள் வழங்கினார்கள்.
மாவட்ட காசநோய் மையத்தின் நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் *டாக்டர்.அ.ஆல்பர் சேக்ரட் செல்வின்* அவர்கள் பேசுகையில், காசநோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மட்டும் போதாது, அவர்களுக்கு சிகிச்சை காலத்தில் தேவையான சத்தான உணவுப் பொருட்களும் உட்கொள்ள வேண்டும். ஆகவே, இதனை கருத்தில் கொண்டு AAA இஞ்சினியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்பில் ரமலான் நோன்பை முன்னிட்டு தொடர்ந்து மூன்றாவது வருடமாக காசநோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வருவது மனிதநேயமிக்க செயலாகும். காசநோயை ஒழிக்க அரசுத் துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் *2025க்குள் காசநோயில்லா தூத்துக்குடி மாவட்டம்* உருவாகும் எனக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவ மருந்தாளுநர் *திரு.சி.வெங்கடேசன்,* நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் *திருமதி.அய்யம்மாள்,* ஆய்வகநுட்பநர்கள் *திருமதி.ம.ராஜேஸ்வரி, திருமதி.ர.உஷாராணி,* பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் *திரு.மு.வேம்பன்* சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹிம் ஹீரா* அவர்கள் நன்றி கூறினார்.