top of page

வல்லநாட்டில் ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை எளிய காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.






தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சென்னை AAA இன்சினியரிங் கன்சல்டன்ஸ் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்பாக புனித ரமலான் நோன்பை முன்னிட்டு எழை, எளிய காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.


இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரரி தலைமை வகித்தார்.


உதவி மருத்துவ அலுவலர் டாறில், சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முதுநிலை சிகிச்சை மேற்பார்வைசயாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றார்.


காசநோயாளிகளுக்கு அரிசி, பலசரக்கு சாமான்கள், முகக்கவசம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை AAA இஞ்சினியரிங் மற்றும் கஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளர் அப்துல் அஜிம் வழங்கினார்.


இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் வேம்பன் நன்றி கூறினார்.


இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.

10 views0 comments
bottom of page