வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவிலான ஆய்வு கூட்டம்...






பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பாக வட்டார அளவிலான ஆய்வு கூட்டம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் *டாக்டர்.பொற் செல்வன்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மக்களை தேடி மருத்துவம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சுரூதி, மாவட்ட நுண்ணியல் நிபுணர் டாக்டர்.வர்ஷா, உதவி திட்ட அலுவலர்.டாக்டர் கனியம்மாள் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.


வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.


துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் திரு.மதுரம் பிரைட்டன், நலக்கல்வியாளர் திரு.அந்தோணிசாமி இவர்கள் திட்ட விளக்க உரை ஆற்றினார்கள்.


நிர்வாக அலுவலர் திரு.ராமமூர்த்தி, கண்காணிப்பாளர் திரு.சிவசுப்பிரமணியம் ஆகியோர்கள் அலுவலக ஆய்வுப் பணியை மேற்கொண்டார்கள்.


இறுதியாக சுகாதார ஆய்வாளர் திரு.சாஹிர் அவர்கள் நன்றி கூறினார்.


இந்த ஆய்வுக் கூட்டத்தில் வல்லநாடு, கருங்குளம், கீழசெக்காரக்குடி, சிங்கத்தாகுறிச்சி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், ஆற்றுப்படுத்துநர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், கண் மருத்துவ உதவியாளர், இடைநிலை சுகாதார பணியாளர் செவிலியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

64 views0 comments