வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்...
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் கௌதம் ராஜ், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார், ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
அலுவலக கண்காணிப்பாளர் அனந்தராமன் வரவேற்றார்.
விழாவில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் சண்முக பெருமாள், சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா, சமுதாய நல செவிலியர், ஆற்றுப்படுத்துனர், ஆய்வக நுட்பநர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.