top of page

வல்லநாடு காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கிய மேலப்பாளையம் தன்னார்வலருக்கு தமிழக அரசு விருது...

வல்லநாடு காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கிய மேலப்பாளையம் தன்னார்வலருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது









தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று *(01.07.2022)* சென்னை, நொச்சிக்குப்பத்தில், *"காசநோய் இல்லா தமிழ்நாடு - 2025"* என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


காசநோயளிகள் குணமடைய சிகிச்சை காலத்தில் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசியம். காசநோய் நோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகத்தில் தானியம், தினை மற்றும் பருப்பு வகைகள் தன்னார்வலர்களால் வழங்கப்படுகிறது. காசநோயாளிகள் முழுமையாக குணமடைய அவர்களுக்கு தகுந்த ஊட்டச்சத்து உள்ள பொருட்களை வழங்கி உறுதுணையாக இருந்த 100 தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை பாராட்டும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 10 தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் *திரு.மா.சுப்பிரமணியன்* அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கிய மேலப்பாளையத்தை சேர்ந்த AAA இஞ்சினியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர் *திரு.அ.அப்துல் ஆஷிக்* அவர்களுக்கு வழங்கினார்.

இந்ந நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பிர்கள் திரு.உதயநிதி ஸ்டாலின், திரு.த.வேலு, துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், திரு.எம்.கோவிந்த ராவ், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் திருமதி.சில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர்.டி.எஸ்.செல்வவிநாயகம், மாநில காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் டாக்டர்.ஆஷா பிரட்ரிக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

27 views0 comments
bottom of page