top of page

விட்டிலாபுரத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...









தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் காசநோய் கண்டறியும் *10 நாள் சிறப்பு முகாம்* விட்டிலாபுரம் கிராமத்தில் இன்று *(29.04.2022)* மாலை தொடங்கப்பட்டது.


வல்லநாடு காச நோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹிம் ஹீரா* அனைவரையும் வரவேற்று பேசினார்.


சிறப்பு முகாமினை விட்டிலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலைவர் *திரு.இலங்காமணி,* அவர்கள் துவக்கி வைத்தார்கள்.


சிறப்பு அழைப்பாளராக செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திரு.கருத்தையா* அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



பத்து நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து 20 பேர் கொண்ட குழு விட்டிலாபுரம் கிராமத்தில் 10 நாட்களாக தங்கி இருந்து காசநோய் சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த 20 பேர் கொண்ட குழு விட்டிலாபுரம் கிராமத்தில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி இரத்த அழுத்தம், நீரிழிவும் கண்டறிந்து காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு

*ரூ.2,000/-* மதிப்புள்ள சளி பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள உள்ளார்கள்.


மேலும் ஒரு நடமாடும் எக்ஸ்ரே வாகனமும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்ரே வாகனம் மூலமும் நுரையீரலில் காசநோய் தொற்று இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும்.


இந்த முகாமில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொழில்நுட்ப அலுவலர்கள் *திரு.மனோஜ், திரு.சுபாஷ்,* திட்ட உதவியாளர்கள் *திரு.ஆறுமுகம், திரு.விநாயகம்,* சுகாதாரத்துறை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இறுதியாக முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் *திரு. இசக்கி மகாராஜன்* அவர்கள் நன்றி கூறினார்.

46 views0 comments
bottom of page