வல்லநாட்டில் 5வது ஆண்டாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு சத்துணவும் வழங்குதல்




தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் ஓய்வு பெற்ற சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியர்கள் / சாராள் தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர்கள் சங்கம் இணைந்து கிறிஸ்துமஸை முன்னிட்டு 5வது ஆண்டாக காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி 23.12.2021 வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மாவட்ட காசநோய் மையத்தின் நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் *டாக்டர்.அ. ஆல்பர்ட் சாக்ரெட் செல்வின்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் *மரு.பா.அஸ்வினி ஜெனிபர்* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
மாவட்ட காசநோய் மைய கல்வியாளர் *மா.தங்கவேல்* துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் *மா.மதுரம் பிரைட்டன்* ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
சாரா டக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் சாரா தக்கர் கல்லூரியின் முன்னாள் மாணவிர்கள் சங்கத்தின் சார்பாக ஏழை காசநோயாளிகளுக்கு சத்துணவை மாவட்ட காசநோய் மையத்தின் நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் *டாக்டர்.அ.ஆல்பர்ட் சாக்ரெட் செல்வின்* அவர்கள் வழங்கி பேசுகையில் வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட காசநோயாளிகளுக்கு சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சார்பாக தொடர்ந்து 5 ஆண்டுகளாக வல்லநாடு காசநோயாளிகளுக்கு சத்துணவு, புத்தாடை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களான *எஸ்தர் லயனல், சாமுவேல், மெர்சி ஹேன்றி, செனட் வில்சன், சிந்தியா பால், பிரேமலதா, நிர்மலா தங்கராஜ்* ஆகியவர்களுக்கு நன்றியையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காசநோயை ஒழிக்க அரசு துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவது மூலம் *2025க்குள்* காசநோய் இல்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாகும் எனக் கூறினார்கள்.
மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் *ச.குப்புசாமி* நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் மைய டி.ஆர். டி.பி ஒருங்கிணைப்பாளர் செ.மாரியப்பன், சுகாதார உதவியாளர் செ.முத்துகிருஷ்ணன், சுகாதாரத் துறை பணியாளர்கள் காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.