top of page

வல்லநாட்டில் தீபாவளியை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி....







தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் ஹெக்சகான் நியூட்ரிஷன் (இன்டர்நேஷனல்) பிரைவேட் லிமிடெட் ஆகியோர்கள் இணைந்து நடத்திய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. உதவி மருத்துவ அலுவலர்கள் டாக்டர்.அஸ்வினி ஜெனிபர், டாக்டர். டாறில் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி வரவேற்புரை ஆற்றினார்.ஹெக்சகான் நியூட்ரிஷன் (இன்டர்நேஷனல்) பிரைவேட் லிமிடெட் சார்பாக தீபாவளி பண்டிகைக்காகக் காசநோயாளிகளுக்குப் புத்தாடைகளை ஆலையின் நிர்வாகிஅப்துல் சுபான் வழங்கினார்.துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.சுந்தரலிங்கம் பேசுகையில் தொடர்நந்து இரண்டாவது வருடமாக ஹெக்சகான் நிறுவனத்தின் சார்பாகக் காசநோயாளிகளுக்குப் புத்தாடை வழங்கப்பட்டு வருகிறது. காசநோயை ஒழிக்க அரசுத் துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் 2025க்குள் காசநோயில்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாகும் எனக் கூறினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தாண சங்கர் வேல், முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன், செல்லப்பா, ஹெக்சகான் நியூட்ரிஷன் (இன்டர்நேஷனல்) பிரைவேட் லிமிடெட் மனித வள மேலாளர் தமிழரசன், கொள்முதல் துறை மூத்த நிர்வாகி நம்பிராஜன், சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முதுநிலை தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா மற்றும் ஹெக்சகான் நியூட்ரிஷன் (இன்டர்நேஷனல்) பிரைவேட் லிமிடெட் மனித வள நிர்வாகி சங்கரபாண்டி ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்

24 views0 comments
bottom of page