வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...

தேசிய காச நோய் அகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக 18.10.2021 அன்று காசநோயாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்.அஸ்வினி ஜெனிபர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் காசநோயாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கி பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக நிவாரண உதவி வழங்கிடும் பொருட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் அரிசி அட்டைதாரர்கள் பெறப்படாத மீதமுள்ள தொகுப்பினை எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோயினால் சிகிச்சை பெறும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் மற்றும் கிட்னி நோயினால் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வல்லநாடு காசநோய் பிரிவுக்குட்பட்ட காசநோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்று கூறினார்.
நம்பிக்கை மைய ஆய்வக நுட்பனர் *உஷாராணி* அவர்கள் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு *முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ. அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.