வல்லநாட்டில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ...


சுகாதாரத் துறையின் தீவிர முயற்சிகளால் கருங்குளம் வட்டாரத்தில் கொரோனா 2வது அலை பரவல் குறைந்து வருகிறது. இச்சூழலில் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து *முன் கள பணியாளர்கள்* தங்களை பாதுகாத்துக் கொள்ள *கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி* வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து *வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் தலைமையில் *(14.06.2021)* இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கீழசெக்காரகுடி அருகேயுள்ள *ஹெக்சகான் நியுட்ரிசன் (இண்டர்நேஷனல்) பிரைவேட் லிமிடெட்* நிறுவனத்தின் மனித வள மேலாளர் *திரு.S.தமிழரசன்* அவர்கள் தலைமையிலான குழு வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்களான *N.95* மாஸ்க்கை *வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி* அவர்களிடம் வழங்கினார்கள்.
இதில் நிறுவனத்தின் தர உத்தரவாத பிரிவு மேலாளர் *திரு.N.R.சரவணன்,*
வணிக மற்றும் ஏற்றுமதி பிரிவின் மூத்த மேலாளர்
*திரு.V.பாலசுப்பிரமணியம்* மனித வள நிர்வாகி *திரு.S.சங்கரபாண்டி*
ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.