கால்வாய் கிராமத்தை சேர்ந்த காசநோயாளியின் ஈமச்சடங்கிற்க்கு நிதி உதவி...

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவிற்க்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தில் நம்பி (வயது.72) என்பவர் காசநோய்க்காகவும் மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்புக்காகவும் சிகிச்சை பெற்று வந்தார்.
நோயாளி நடப்பதற்க்கு மிகவும் சிரமப்பட்டதால் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் 03.07.2022 அன்று மரணமடைந்தார்.
நோயாளியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு *AAA இஞ்னியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரக்சன்ஸ்* உரிமையாளர் *திரு.அ.அப்துல் ஆஷிக்* அவர்கள் சார்பாக வழங்கிய ஈமச்சடங்கிற்கான நிதியை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் கால்வாய் கிராமத்தில் உள்ள நோயாளியின் வீட்டிற்கு சென்று *05.07.2022* இன்று வழங்கினார்.