வல்லநாட்டில் தேசிய காசநோயகற்றும் திட்டப்பணிகள் ஆய்வு


துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்கள் ஆணைக்கினங்க, வல்லநாடு பகுதிகளில் தேசிய காசநோயகற்றும் திட்ட பணிகள் ஆய்வு (01.06.2021) அன்று நடைபெற்றது.
மாவட்ட தீர்வு முறை அமைப்பாளர் திரு.குப்புசாமி அவர்கள் தலைமையிலான குழு *முறப்பநாடு, மணக்கரை ஆகிய பகுதிகளில் சிகிச்சை எடுக்கும் காசநோயாளிகளை நேரில் சந்தித்து சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்கள்.
இந்த ஆய்வில் ஊரடங்கு காரணமாக மருத்துவமனைக்கு வர இயலாத காசநோயாளிகளுக்கு *ஒரு மாதத்திற்க்கு தேவையான மருந்து, மாத்திரைகள்* வழங்கப்பட்டது.
ஆய்வின்போது மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சந்தானசங்கர்வேல், வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா, திரு.செல்வராஜ், திரு.செல்லப்பா ஆகியோர்கள் இருந்தார்கள்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு செய்திருந்தது.