வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு...



தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் உள்ள காசநோயாளிக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவ பணிகள் துணை இயக்குநர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுந்தரி வரவேற்றார். சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர் வேல் ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினர். ஹெக்சகான் நியூட்ரிஷன் பிரைவேட் லிமிடெட் துணைப்பொது மேலாளர் நிதின் ஹடாப், மூத்த மேலாளர் பாலசுப்பிரமணியன், மனித வள மேலாளர் தமிழரசன், மனித வள நிர்வாகி சங்கரபாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசயோயகற்றும் திட்டம் மற்றும் ஹெக்சகான் நியூட்ரிஷன் பிரைவேட் லிமிடெட் இணைந்து செய்திருந்தனர்.