top of page

வல்லநாட்டில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...

வல்லநாட்டில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...







தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் *வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.சுந்தரி* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உதவி மருத்துவ அலுவலர் *டாக்டர். கரிஷ்மா செல்வராஜ்* , சித்த மருத்துவ அலுவலர் *டாக்டர். செல்வக்குமார்* மாவட்ட காசநோய் மைய நலக்கல்வியாளர் *திரு.தங்கவேல்* ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.

மாவட்ட காசநோய் மைய அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் *திரு.மோகன்* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.


வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் முகாமை துவக்கி வைத்து பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் *காசநோய் இல்லா தமிழ்நாடு - 2025* என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கடந்த மாதம் சென்னை நொச்சிகுப்பத்தில், 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.


அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எக்ஸ்ரே வாகனம் மூலம் மாதத்திற்கு ஒரு முறை கருங்குளம் வட்டார கிராமங்களில் எக்ஸ்ரே எடுக்கும் முகாம்கள் நடைபெறும்.

அவ்வாறு முகாம் நடைபெறும் போது பொதுமக்கள் முகாமினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இம்முகாமில் 48 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 5 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


வட்டார சுகாதார மேற்பார்வையாளர் *திரு.முத்துக்குமாரசாமி* நன்றி கூறினார்.

இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் திரு.சாஹிர், எக்ஸ்ரே நுட்பனர் திரு.கிறிஸ்டின் குமாரதாஸ், நம்பிக்கை மையப்படுத்தினர் திருமதி.அய்யம்மாள், ஆய்வகநுட்பனர் செல்வி.உஷாராணி, சுகாதார பார்வையாளர் திருமதி.முத்துலட்சுமி, மருத்துவமனை பணியாளர் திரு.வேம்பன், அவார்டு தொண்டு நிறுவன களப்பணியாளர் திரு.ஜீவா குமார், திரு.அரி பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.

43 views0 comments
bottom of page