வல்லநாட்டில் நலிவடைந்த காசநோயாளிக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி...


தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நலிவடைந்த காசநோயாளியின் குடும்ப உறுப்பினருக்கு *தையல் இயந்திரம்* வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர். மு.சுந்திரி,* சித்த மருத்துவ அலுவலர் *டாக்டர்.ச.செல்வகுமார்* ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் நலிவடைந்த காசநோயாளியின் குடும்ப உறுப்பினருக்கு தையல் இயந்திரத்தை வழங்கி பேசுகையில், வல்லநாட்டில் நலிவடைந்த காசநோயாளிகளுக்கு தனியார்த்துறை ஒருங்கிணைப்பு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காசநோயாளிகள் தகுதியின் அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய வல்லநாடு காசநோய் பிரிவு தயாராக உள்ளது. கருங்குளம் வட்டாரத்தில் உள்ள காசநோயாளிகள் உதவிகளை பெற்று அவைகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
இதில் மாவட்ட தீர்வு முறை அமைப்பாளர் *திரு.குப்புசாமி,* ஆய்வகநுட்பனர் *திருமதி.மு.ராஜேஸ்வரி,* *திரு.செல்லப்பா* மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் *திரு.மு.வேம்பன்* அவர்கள் நன்றி கூறினார்
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.