வல்லநாட்டில் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி...


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரை காசநோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தை அனுசரிக்கும் விதமாக தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள்; தலைமையில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து 18.02.2021 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது. உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்.டாரில், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
மருத்துவமல்லா மேற்பார்வையாளர் இளங்கோ ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி உறுதிமொழியை வாசிக்க அனைவரும் அதை தொடர்ந்து வாசித்து ‘காசநோய் இல்லாத தூத்துக்குடியை 2025க்குள் உருவாக்குவோம்” என உறுதி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சமுதாய நலச் செவிலியர் சாந்தா குமாரி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் ஐயம்மாள், கிராம சுகாதார செவிலியர்கள் சொர்ணத்தம்மாள், பேச்சியம்மாள், ரொனால்டு டிக்ஸி, மருத்துவமனை பணியாளர் வேம்பன், சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியாக சித்த மருத்துவ மருந்தாளுநர் சி.வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.