சுட்டெரிக்கும் கோடை வெயில் - வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்திற்கு குடை...



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அனல் காற்று வீசுகிறது. வெயில் கடுமையாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்ல கமுடியாதநிலையில் உள்ளது. இந்தநிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா கீழநத்தம் தெற்கு ஊரைச்சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் இரும்பு கம்பிகள் மற்றும் தார்பாய் துணிகொன்டு மேற்கூரை அமைத்துள்ளார். இதனால் வெயிலின் தாக்கம் தெரியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.