top of page

தூத்துக்குடியில் உலக காசநோய் தினவிழா - சாரா தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கத்துக்கு கேடயம்...

தூத்துக்குடியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சாரா தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கத்திற்க்கு கேடயம் வழங்கப்பட்டது ...



இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ஆம் நாள் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை அனுசரிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உலக காசநோய் தினம் (24.03.2022) தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு இணை இயக்குனர் நலப்பணிகள் *டாக்டர்.முருகவேல்* அவர்கள் தலைமை தாங்கினார்.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் *டாக்டர்.நேரு,* மருத்துவ கண்காணிப்பாளர் *டாக்டர்.ராஜேந்திரன்* ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.


நெஞ்சக மருத்துவப்பிரிவு துறைத் தலைவர் *டாக்டர்.சங்கமித்ரா* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.


துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.


வல்லநாடு வட்டார காசநோயாளிகளுக்கு கடந்த *5* ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு நிதி உதவியுடன் கூடிய சத்துணவு, புத்தாடை மற்றும் காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சேவை புரிந்ததற்காக *திருநெல்வேலி சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் / சாரா தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கத்திற்க்கு*

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் *டாக்டர்.கி.செந்தில்ராஜ்* இ.ஆ.ப. அவர்கள் கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.

கேடயத்தை திருநெல்வேலி சாரா தக்கர் கல்லூரியின் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் *திருமதி.T. ஜோன்ஸ்*, உயிரியல் துறை பேராசிரியர் *டாக்டர்.K. ஜெபஆனந்தி* ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் *டாக்டர்.பொற்செல்வன்,*

கோவில்பட்டி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் *டாக்டர்.போஸ்கோ ராஜா*, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (குடும்பநலம்) *டாக்டர். பொன் இசக்கி*, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) *டாக்டர்.யமுனா,* இந்திய மருத்துவக் கழக தூத்துக்குடி கிளை தலைவர் *டாக்டர்.சந்திரசேகர்* ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


இறுதியாக மாவட்ட காசநோய் நிலைய மருத்துவ அலுவலர் *டாக்டர்.ஆல்பர் சேக்ரட் செல்வின்* அவர்கள் நன்றி கூறினார்.

49 views0 comments
bottom of page