தூத்துக்குடியில் பொது சுகாதரத் துறையின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி...
தூத்துக்குடியில் பொது சுகாதரத் துறையின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி...




பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு
தூத்துக்குடி சுகாதார மாவட்டம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.பொற்செல்வன் அவர்கள் ரோச் பார்க்கிலிருந்து போட்டியினை துவக்கி வைத்தார்கள்.
மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.அருண்குமார் அவர்கள் முன்னிலையில் வகித்தார்கள்.
நலக் கல்வியாளர் திரு.அந்தோனிசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மினி மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு.பொற்செல்வன் அவர்கள் வழங்கினார்கள்.
ரோச் பார்க்கிலிருந்து துவங்கிய மினி மாரத்தான் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தருவை மைதானத்தில் நிறைவடைந்தது.
துணை இயக்குனரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தொற்று நோயியல் நிபுணர் மரு.மெர்வினோ தேவதாசன், தடுப்பூசி அலுவலர் மரு.கன்னியம்மாள், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பத்மா, சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின், ராஜசேகர், ராஜபாண்டி, வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள்
உள்ளிட்ட 303 பேர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை இணைந்து செய்திருந்தது.