தூத்துக்குடியில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்...
தூத்துக்குடியில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடந்தது...



பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் ரத்த தான முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத் துறையின் சார்பாக இரத்ததான முகாம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் வைத்து நடைபெற்றது.
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் *டாக்டர்.பொற்செல்வன்* அவர்கள் இரத்த தானம் செய்து முகாமினை துவக்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து மாநகர் நல அலுவலர் டாக்டர்.அருண்குமார், தொற்று நோயியல் நிபுணர் டாக்டர்.மெர்வினோ தேவதாசன், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் திரு.மதுரம் பிரைட்டன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.தினேஷ், செபத்தியாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெயலால் சுவாமிநாதன், மக்களைத் தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், ஆய்வக நுட்பனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 51 பேர் இரத்த தானம் செய்திருந்தார்கள்.
ஏற்பாடுகளை பொது சுகாதாரத் துறையினர் மற்றும் இரத்த வங்கியினர் இணைந்து செய்திருந்தார்கள்.