தூத்துக்குடியில் ஊதிய உயர்வை வலியுறுத்தி காசநோய் பணியாளர்கள் கோரிக்கை மனு


தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட கள ஆய்வு கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
கள ஆய்வின் கடைசி நாளான இன்று *(18.05.2022)* மாநில காசநோய் அலுவலர் *டாக்டர்.ஆஷா பிரடரிக்* அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காசநோய் பணியாளர்கள் தேசிய நலவாழ்வு குழும வழிகாட்டுதலின்படி காசநோய் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப இருசக்கர வாகனத்திற்கான எரிபொருள் அலவன்ஸ் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்றும், பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், மருத்துவ விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில காசநோய் அலுவலர் *டாக்டர்.ஆஷா பிரடரிக்* அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்கள்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள், முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்கள், சுகாதார பார்வையாளர்கள், ஆய்வக நுட்பனர்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.