வல்லநாடு துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் காசநோய் எதிர்ப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி...






ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரை காசநோய் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தை அனுசரிக்கும் விதமாக தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி வல்லநாடு துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் 17.02.2023 அன்று நடைபெற்றது.
துளசி மகளிர் சட்டக் கல்லூரி முதல்வர் முனைவர்.மி.இ.பி.முகம்மது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவியர்களிடையே பேசுகையில்,...
காசநோய் என்பது பரம்பரை நோய் அல்ல. அது காற்றின் மூலம் பரவும் ஒரு வகை தொற்றுநோய். இந்தியாவில் காசநோயினால் ஐந்து நிமிடத்திற்கு இரண்டு பேர் மரணிப்பதாகவும். வருடத்திற்கு ஒரு லட்சம் பெண்கள் குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் மாணவியர்களுக்கு காசநோய் குறித்த கேள்விகளை மாவட்ட தீர்வு முறை அமைப்பாளர் திரு.ச.குப்புசாமி அவர்களால் கேட்கப்பட்டு சரியாக விடை அளித்தவர்களுக்கு துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர். க.சுந்தரலிங்கம் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.
துளசி மகளிர் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் திருமதி.ஹ. வள்ளித்தாய் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.செ.மதியழகன் சுகாதாரத்துறை பணியாளர்கள், கல்லூரியின் பேராசியர்கள் மற்றும் மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் செய்திருந்தார்.