நெல்லை டவுன் தொண்டர் சன்னதி அருகே போக்குவரத்து பாதிப்பு


நெல்லை மாவட்டம் வீராணத்திலிருந்து இருந்து 36 டன் எடைகொண்ட E.B. டிரான்ஸ்பார்மர் பழுது பார்ப்பதற்காக 26 டயர் கொண்ட ட்ரக் லாரியில் டிரைவர் ஆனந்த் என்பவர் சென்னை நோக்கி கொண்டு செல்வதற்காக நெல்லை டவுன் தொண்டர் சன்னதி அருகே வரும்போது திருப்ப முடியாமல் நடுரோட்டில் இன்று அதிகாலை மாட்டிக்கொண்டது. இதனால் போக்குவரத்து சிறிது பாதிப்படைந்தது. இன்று இரவு 10 மணிக்கு மேல் பின்னோக்கி செல்ல முடிவு செய்யப்பட்டது.