+2 பொதுதேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகளுக்கு SP பாராட்டு...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் செல்வி. பிரித்திகாவை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தமிழகத்தில் கடந்த மே மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் 20.06.2022-ம் தேதி வெளிவந்தது. இத்தேர்வில் திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் *சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.கிருஷ்ண பெருமாள் அவர்களின் மகள் செல்வி.பிரித்திகா, அவர்கள்* பன்னிரெண்டாம் வகுப்பில் 596 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார்.
அதிக மதிப்பெண் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் மகள் செல்வி. பிரித்திகாவை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் இன்று நேரில் அழைத்து புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்து கூறினார். மேலும் செல்வி. பிரித்திகாவிடம், இதேபோல் மேற்படிப்பில் நன்கு படித்து உயர்ந்த நிலையை அடைந்து வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.