நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கிருமிநாசினி தெளிப்பு..





தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல நிர்வாக இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்துப் பேருந்துகளும் கிருமிநாசினிகள் கொண்டு கைப்பிடிகள் சுத்தப் படுத்தப்பட்டது. பேருந்துகள் அனைத்தும் ஏற்கனவே டிப்போவில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப் பட்டிருந்த போதிலும் பயணிகள் ஏறி இறங்கிய ஒவ்வொரு டிரிப் நிறைவடையும் போதும் அந்த பேருந்தின் கைப்பிடிகள் மற்றும் பொதுமக்கள் தொட்டு பயன்படுத்தும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறது. நெல்லை தாமிரபரணி டிப்போ கிளை மேலாளர் விஜயகுமார், தொழில்நுட்பப் துணை மேலாளர் சமுத்திரம் புதிய பேருந்து நிலைய உதவி பொறியாளர் முனியசாமி மற்றும் தாமிரபரணி டிப்போ பணியாளர் திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
News sponser : https://lapureherbals.in/
