top of page

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காலை முதல் நள்ளிரவு வரை பணியாற்றி சீரமைப்பு...







நெல்லை மாநகர் கொக்கிரகுளம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நேற்று அதிகாலை சுமார் 4.50 மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது. மின்வாரிய உயர் அலுவலர்கள் அறிவுரைப்படி மின் பழுது நீக்கும் பணி உடனடியாக நடந்தது. சுமார் அரை மணி நேரத்தில் மின் விநியோகம் வந்து மீண்டும் இரு நிமிடத்தில் தடைபட்டது. இதனால் நெல்லை சந்திப்பு பாளையில் பல பகுதிகளில் மின் தடை நீடித்தது. துணை மின் நிலையத்தில் உள்ள பவர் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்க நீண்ட நேரம் ஆகுமென்பதால் உடனடியாக மாற்றுப்பாதையில் தடைபட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் காலை 6.37 மணிக்கு மின்தடை முற்றிலும் நீங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். அதே வேளையில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணி காலையில் துவங்கி நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்தது. இப்பணியை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செயற்பொறியாளர் சார்லஸ், சுரேஷ்குமார், சங்கர், காமராஜ், உதவி பொறியாளர்கள் அபிராமிநாதன், முத்துராமலிங்கம், செல்வி மற்றும் ஆக்க முகவர்கள்,கம்பியாளர்கள் மற்றும் களஉதவியாளர்கள் அனைவரும் இணைந்து இந்த பணியை சிறப்பாக seithumudithanar. .

44 views0 comments
bottom of page