சாந்திநகர் பிரிவில்- மேலப்பாட்டம், மேலப்பாளையம் பிரிவில் -சிவராஜபுரம் பகுதியில் புதிய மின்மாற்றிகள்
தமிழ் நாடு மின்சார வாரியம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் நகர்புற கோட்டம் பாளையங்கோட்டை உபகோட்டம் சாந்தி நகர் பிரிவிற்குட்பட்ட மேலப்பாட்டம் பகுதியில் ஏற்கனவே இருந்த மின்மாற்றியின் குறைந்தழுத்த மின்பளுவை அதிகரிப்பதற்காக ரூபாய் மூன்று லட்சத்து அறுபத்து நான்காயிரம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் சீர் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பாளையங்கோட்டை உதவி செயற்பொறியாளர் திரு. எட்வர்ட் பொன்னுசாமி, சாந்தி நகர் உதவி பொறியாளர் திரு. சங்கர், கட்டுமானம் மற்றும் மேம்பாடு உதவி பொறியாளர் திருமதி. ஜன்னத்துல் சிபாயா, மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் நாடு மின்சார வாரியம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் நகர்ப்புறம் கோட்டம் சந்திப்பு உபகோட்டம் மேலப்பாளையம் பிரிவில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவராஜபுரம் பகுதியில் ஏற்கனவே இருந்த மின்மாற்றியின் குறைந்தழுத்த மின்பளுவை அதிகரிப்பதற்காக ரூபாய் இரண்டு லட்சத்து தொண்ணூற்று
ஐந்தாயிரம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் சரி செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சந்திப்பு உதவி செயற்பொறியாளர் திரு. சார்லஸ், மேலப்பாளையம் உதவி பொறியாளர் திருமதி. ரத்னவேணி, கட்டுமானம் மற்றும் மேம்பாடு உதவி பொறியாளர் திருமதி. ஜன்னத்துல் சிபாயா, மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிவராஜபுரம்