தியாகராஜநகர் சிருங்கேரி சாரதா கோவில் அருகே ரூபாய் 7,22,640/- செலவில் புதிதாக மின் மாற்றி...

தமிழ்நாடு மின்சார வாரியம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் நகர்ப்புற கோட்டம் சந்திப்பு உப கோட்டம் மகாராஜநகர் பிரிவுக்குட்பட்ட தியாகராஜ நகர் பகுதியில் சிருங்கேரி சாரதா கோவில் அருகே ரூபாய் 7,22,640/- செலவில் புதிதாக மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தலைமை பொறியாளர் திரு. செல்வகுமார் மற்றும் மேற்பார்வை பொறியாளர் திரு. செல்வராஜ் ஆகியோரின் உத்தரவின்பேரில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின்வினியோகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் செயற்பொறியாளர் நகர்புறம், திரு. முத்துக்குட்டி, உதவி செயற் பொறியாளர்கள் திரு.சங்கர், திரு. ரமேஷ், உதவி பொறியாளர்கள் திரு. வெங்கடேஷ், திருமதி. ஜன்னத்துல் சிபாயா, மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.