பாளையம்கோட்டை கோபாலசாமி கோயில் தேர்ப்பவனி காலங்களில் மின்தடை நேரத்தை குறைக்க மின் பாதை சீரமைப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் வண்ணார்பேட்டை பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட கோபாலசாமி கோயில் ரத விதிகள் மற்றும் தெற்கு பஜார் ஆகிய பகுதிகளில் தேர்ப்பவனி காலங்களில் மின்தடை நேரத்தை குறைக்கவும் கனரக வாகனங்களால் ஏற்படும் மின் தடைகளை தடுக்கும் பொருட்டும் கோபாலசாமி கோயில் ரத வீதிகளிலும் தெற்கு பஜார் பகுதிகளிலும் இரண்டு பக்கமும் மின் கம்பங்கள் நடப்பட்டு மின் பாதைகள் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது இப்பணியை வண்ணாரப்பேட்டை உதவி மின்பொறியாளர் முத்துராமலிங்கம் தலைமையில் வண்ணார்பேட்டை பிரிவு பணியாளர்கள் பணிகளை செய்து முடித்தனர்




